விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 2ம் பாகத்தில் தற்போது தங்கமயில் தான் ஒரு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு ஹோட்டல் ஒன்றில் டபிள் துடைக்கும் வேலை செய்கிறார்.
தான் டிகிரி முடிக்கவில்லை என்கிற உண்மையை மறைக்க அவர் இப்படி செய்துகொண்டிருந்தார்.
அடுத்த வார ப்ரோமோ
தங்கமயில் தான் வேலை செய்யும் ஹோட்டலுக்கு தெரிந்தவர்கள் யாராவது வந்தால், அவர்களிடம் இருந்து ஓடி ஒளிந்துகொண்டு தப்பி வந்தார்.
இந்நிலையில் தற்போது அடுத்த வார ப்ரொமோ வெளியாகி இருக்கிறது. அதில் தங்கமயில் சர்வர் வேலை செய்வதை அவரது கணவரே பார்த்துவிடுகிறார்.
பொய் சொன்னது தவறு என கூறி அவரை திட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறார். ப்ரோமோவை பாருங்க.