முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாடொன்றின் முன்னாள் ஜனாதிபதி விமான நிலையத்தில் அதிரடியாக கைது

பிலிப்பைன்ஸ் (Philippines) முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ துதெர்த்தே (Rodrigo Duterte) மணிலா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (International Criminal Court) கைது உத்தரவைத் தொடர்ந்து விமான நிலையத்தில் வைத்து இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது கைது, பிலிப்பைன்ஸ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடையே நீதி கிடைத்ததாக உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருளுக்கு எதிரான போர்

முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ “மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்” என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார், 2016 – 2022 ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய “போதைப்பொருளுக்கு எதிரான போர்” தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரொட்ரிகோ துதெர்த்தேவின் இந்த போதைப்பொருள் எதிர்ப்பு விவகாரத்தில் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி 6,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

ஆனால், மனித உரிமை அமைப்புகள் இந்த எண்ணிக்கை 30,000 வரை இருக்கலாம் என கூறுகின்றன, இதில் பலர் சட்டவிரோதமாக கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணை, டுட்டெர்டே டாவோ நகர மேயராக இருந்த 2011 முதல், பிலிப்பைன்ஸ் 2019 இல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து விலகும் வரை நடந்த குற்றங்களை உள்ளடக்கியது.

அதிகாரிகளின் பிடியில் 

கைதுக்கு முன், ஹொங்கொங்கில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய ரொட்ரிகோ துதெர்த்தே, “இது என் விதியாக இருந்தால், அதை ஏற்றுக்கொள்கிறேன்.

வெளிநாடொன்றின் முன்னாள் ஜனாதிபதி விமான நிலையத்தில் அதிரடியாக கைது | Philippines Ex President Arrested On Icc Warrant

கைது செய்யப்பட்டால், சிறையில் அடைக்கப்பட்டால், அதை எதிர்க்க முடியாது” என்று கூறியிருந்தார்.

ரொட்ரிகோ துதெர்த்தே தற்போது அதிகாரிகளின் பிடியில் உள்ளார் மற்றும் அவரது உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாகவும், அரசு வைத்தியர்களால் பராமரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.youtube.com/embed/uBZLl-FTPbEhttps://www.youtube.com/embed/H1UWup-3Vxg

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.