முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாடாளுமன்ற சிறப்புரிமை தொடர்பில் பிரதம நீதியரசர் ஊடாக சபாநாயகருக்கு விளக்கம்

Courtesy: Sivaa Mayuri

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மற்றும் அதிகாரங்கள் நீங்கலாக அனைத்துக் களங்களிலும் பொது அதிகார வரம்பைப் பயன்படுத்துவதற்கான முழுப் பொறுப்பை இலங்கையின் நீதித்துறை கொண்டுள்ளது என்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, சபாநாயகருக்கு கடிதம் ஒன்றின் மூலம் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

குறிப்பிட்ட நீதிமன்ற நடவடிக்கைகளின் விளைவாக நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச எழுப்பிய விடயங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த விடயத்தை, பிரதம நீதியரசர் வெளிப்படுத்தியுள்ளார்.

நீதித்துறையின் சுதந்திரம்

அரசியலமைப்பின் அடிப்படையில் பொதுமக்களின் நீதித்துறை அதிகாரம் நீதிமன்றத்தின் ஊடாக நாடாளுமன்றத்தினால் பிரயோகிக்கப்படுவதாக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

எனினும், இந்த அதிகாரத்தை நாடாளுமன்றம் மற்றும் அதன் உறுப்பினர்கள் அதன் சொந்த அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகளின் அடிப்படையிலேயே பயன்படுத்துவதாக பிரதம நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற சிறப்புரிமை தொடர்பில் பிரதம நீதியரசர் ஊடாக சபாநாயகருக்கு விளக்கம் | Parliamentary Privilege Letter To The Speaker

இந்தநிலையில், நீதித்துறை அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்துவதற்கு அவசியமான நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் உறுதி செய்வதற்கும் அனைத்துத் துறையினரின் பொறுப்பையும், தமது கடிதத்தில் பிரதம நீதியரசர் எடுத்துரைத்துள்ளார்.

நீதித்துறையின் சுதந்திரமானது, இலங்கையின் எதிர்கால சந்ததியினர் மற்றும் உலகளாவிய சமூகத்தின் பெருமை மற்றும் செழுமைக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு மரபுரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதம நீதியரசர், சபாநாயகரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.