பத்தரமுல்ல குடிவரவு திணைக்களத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் பத்தரமுல்ல குடிவரவு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் நேற்று இரவில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கடவுச்சீட்டு பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரிசையில் காத்திருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய மக்கள், “மக்கள் மிகவும் மோசமான துன்பத்தை அனுபவிக்கின்றார்கள். அனைத்திற்கும் பணம் மாத்திரமே தேவைப்படுகின்றது.
பெருந்தொகை பணம்
மூன்று நாட்களாக இங்கு காத்திருக்கின்றோம். சாப்பிட குடிப்பதற்கு என்று பெருந்தொகை பணம் செலவாகின்றது. கையில் இருந்த பணம் முழுவதும் தீர்ந்து விட்டது.
“இந்த நீண்ட வரிசையில் காத்திருந்தால் 300 பேருக்கு மட்டுமே கடவுச்சீட்டு வழங்கப்படும். உள்ளே சென்றதும் அங்கும் நீண்ட வரிசை உள்ளது.
உள்ளே சென்றவுடன் கடவுச்சீட்டு நிராகரிக்கப்பட்டதாக கூறுகின்றார். அதனை முன்பே கூறியிருந்தால் இப்படி காத்திருக்க நேரிட்டிருக்காது.
அந்நிய செலாவணி
பணம் செலுத்தி மூன்று நாட்களுக்குப் பிறகு எந்த அறிவிப்பும் இல்லை, நீங்கள் உள்ளே செல்லும்போது உங்களுக்கு ஒரு கடிதம் தேவை என்று கூறப்படுகிறது.
எங்களிடம் பணம் பெறுகிறார்கள். வெளிநாடு சென்றால் எங்கள் பணம் நாட்டுக்கு வருகிறது. வரிசையில் காத்திருந்து சாப்பிடுவது கூட இல்லை. ஓய்வறை இல்லை, தீர்வு தேவைப்படுகின்றது” என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.