முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டின் பல பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள்

காலி, பூசா சிறைச்சாலையின் கைதிகளுக்கு தடைசெய்யப்பட்ட பொருட்களை விநியோகம் செய்த குற்றச்சாட்டில் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் காமினி திசாநாயக்க, நேற்று (04) சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை வழங்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கண்டறியப்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் இளைஞன் கைது

அத்துடன், இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்
அடிப்படையில்,முருங்கன் பொலிஸாரினால் ஒரு தொகுதி போதை மாத்திரைகளுடன்
சிலாபத்துறை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் | Police Operations Carried Out In Sri Lanka

குறித்த நபர் போதை மாத்திரைகளுடன் முருங்கன் பஜார் பகுதியில் வைத்து கைது
செய்யப்பட்டுள்ளதோடு அவரிடம் இருந்து 200 போதை வில்லைகள் அடங்கிய பொதி மீட்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரும், போதை மாத்திரைகளும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முருங்கன் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தி – ஆசிக்

யாழில் இளைஞர்கள் கைது

மேலும், யாழ். வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சாவுடன் மூன்று
இளைஞர்கள் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் | Police Operations Carried Out In Sri Lanka

காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி மு.உதயானந்தன்
தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போதே அவர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 29, 34 மற்றும் 23 வயதுடையவர்கள். அவர்களில்
ஒருவர் இரு தினங்களுக்கு முன்னர் அதே பொலிஸாரால் அதே பகுதியில் வைத்து
கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றத்தால் பிணையில்
விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி – தீபன்

கிளிநொச்சியில் இராணுவ சிப்பாய் கைது 

இதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 பிரதான வீதியின் உமையாள்புரம்
பகுதியில் 500 கிராம் எடை கொண்ட கஞ்சாவுடன் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் | Police Operations Carried Out In Sri Lanka

குறித்த இராணுவ சிப்பாய் நேற்று பேருந்து தரிப்பிடத்தில் நின்றுக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் கிளிநொச்சி பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி – தேவந்தன்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.