இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க நாளை இந்தியா செல்கின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரமுகரான முன்னாள் அமைச்சர் ஹரின்
பெர்னாண்டோ இந்த தகவலை வெளியிட்டார்.

அநுர அரசுக்கு எதிராக நடைபெறும் பேரணி
எனவே, நாளை நுகேகொடையில் அநுர அரசுக்கு எதிராக நடைபெறும் பேரணியில் ரணில்
விக்ரமசிங்க பங்கேற்பது சாத்தியமில்லை எனவும், இரண்டாம் தலைமைத்துவத்தை
கட்டியெழுப்புவதே ரணிலின் நோக்கம் எனவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் இலங்கையில் இருந்து மேலும் பல
முக்கிய அரசியல் பிரமுகர்கள், இராஜதந்திரிகள் பங்கேற்கவுள்ளனர்.

