முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வேறு இடங்களில் வேலை தேடலாம் – தபால் ஊழியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

மேலதிக நேரக் கொடுப்பனவு போதுமானதாக இல்லை அல்லது கைரேகை வருகை முறையை ஏற்க முடியாதவர்கள் வேறு இடங்களில் வேலை தேடலாம் என அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அஞ்சல் சேவையில் மேலதிக நேரக் கொடுப்பனவு கட்டமைப்பிலோ அல்லது கைரேகை வருகை முறையிலோ மேலும் மாற்றங்கள் எதுவும் செய்யப்படாது என்று மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மேலதிக நேரக் கொடுப்பனவு

ஏப்ரல் மாத மேலதிக நேரக் கொடுப்பனவு ஜனவரி 2027 முதல் பொருந்தக்கூடிய அடிப்படை வேதனத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.

வேறு இடங்களில் வேலை தேடலாம் - தபால் ஊழியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை | Postal Dept Salary And Overtime Payment

என்றும், ஏப்ரல் 2025 அல்லது ஜனவரி 2026 இல் அறிமுகப்படுத்தப்பட்ட சம்பள உயர்வுகளின் அடிப்படையில் அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.

தற்போதைய நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக, திறைசேரியால் சில மேலதிக நேரக் கொடுப்பனவு சூத்திரங்களை ஏற்க முடியவில்லை, இதன் விளைவாக சில ஊழியர்கள் கணக்கிடப்பட்ட தொகையில் நான்கில் மூன்று பங்கு (3/4) மற்றும் மற்றவர்கள் ஆறில் ஐந்து (5/6) பெறுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

சுமார் 23,000 அஞ்சல் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி 2027 இன் முழு அடிப்படை வேதனத்தின் அடிப்படையில் 5/6 ஊதிய மாதிரி ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

அஞ்சல் துறையின் நிர்வாக அலுவலகங்களில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள கைரேகை அடிப்படையிலான வருகை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்ததையும் அவர் குறிப்பிட்டார்.  

ஊழியர் கைரேகை முறை

மத்திய அஞ்சல் பரிமாற்றத்தில் உள்ள ஒரு சிறிய குழு ஊழியர்கள் மட்டுமே இணங்க மறுத்துள்ளதாகவும் இந்த நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அமைச்சர் கூறினார். திறைசேரி நிதியைப் பயன்படுத்தி வேதனத்தையும், மேலதிக நேரக் கொடுப்பனவையும் அதிகரித்துள்ளோம்.

வேறு இடங்களில் வேலை தேடலாம் - தபால் ஊழியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை | Postal Dept Salary And Overtime Payment

இந்த அதிகரிப்புகள் இருந்தபோதிலும், ஒரு ஊழியர் கைரேகை முறையைப் பயன்படுத்த மறுத்தால், அதை நாங்கள் அனுமதிக்க முடியாது என்று அவர் கூறினார்.

இதனால் மேலதிக நேரக் கொடுப்பனவுகளில் மேலும் அதிகரிப்பு இல்லை மற்றும் கைரேகை முறையை நீக்குவதில்லை என்ற தீர்மானத்துக்கு இணங்கும் அஞ்சல் ஊழியர்கள் பணியில் இருப்பார்கள் எனவும் ஏற்க முடியாதவர்கள் வேறு இடங்களில் வேலை தேடலாம் என்று அவர் கூறினார்.

இரண்டையும் முழுமையாக ஏற்றுக்கொண்ட பின்னரே நாங்கள் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடத் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.