யாழ். (Jaffna) மாவட்ட பதில் அரசாங்க அதிபராக இருந்த மருதலிங்கம் பிரதீபன் யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
குறித்த நிகழ்வு, இன்று (04.06.2024) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் காலை 09 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபனுக்கு பொன்னாடை
போர்த்தி மலர்மாலை அணிவித்து வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
நியமனம் வழங்கல்
மேலும், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணி ஏஸ். ஸ்ரீமோகன், மற்றும்
மாவட்ட செயலக பதவி நிலை அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
அதேவேளை, பிரதமர் தினேஷ் குணவர்த்தவினால் (Dinesh Gunawardana) நேற்றைய தினம் (03) பிரதமர் அலுவலகத்தினால்
வைத்து யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபனுக்கான நியமனம்
வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.