ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை வலுப்படுத்தும் நோக்கில் அவருக்கு ஆதரவுகோரி யாழ்ப்பாணத்தில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இன்றையதினம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நடைபெறவள்ள ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் “ரணிலை அறிந்து கொள்வோம்” எனும் பிரசார நிகழ்ச்சி நாடளாவிய ரீதியில் இன்று (07) காலை 8 மணிக்கு யாழ்ப்பாணம் ஸரான்லி வீதியில் அமைந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.
டக்ளஸ் தேவானந்தா
குறித்த நிகழ்வை யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட குழுவினர் இன்று காலை யாழ் நகரில் குறித்த நிகழ்வை ஆரம்பித்துவைத்து பிரசார நடவடிக்கையை மேற்கொண்டனர்.
ரணிலை அறிந்து கொள்வோம்” என்ற குறித்த நிகழ்வானது இலங்கையின் 09 மாகாணங்களிலும் உள்ள 160 தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கியதாகவும், 341 உள்ளுராட்சி மன்றங்கள், 4984 வட்டாரங்கள், 14026 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் 53,896 கிராம வீதிகளை உள்ளடக்கியவகையிலும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக, அரசியல், சமூக மற்றும் கலாசார ரீதியில் ரணில் விக்ரமசிங்கவின் பாத்திரத்தை மக்களுக்கு அறிந்து கொள்ளும் ஒரு திட்டமாக அமைந்துள்ளது.
வவுனியா
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்
தலைமையில் வவுனியா நகரப் பகுதியில் பிரசாரப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைவாக, வவுனியா நகரப் பகுதியில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க
அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் நகரப் பகுதியில்
காணப்படும் வர்த்தக நிலையங்களில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து தேர்தல்
பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்,
ரணில்
விக்கரமிசிங்கவை மீண்டும் ஜனாதிபதி ஆக்குவதற்கு எமது மக்கள் மிகுந்த
ஆர்வத்துடன் இருப்பதனை அவதானிக்கின்றோம்.
அவர் அதிகப் பெரும்பான்மையான
வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார். அதற்கான சந்தர்ப்பங்களே இருக்கின்றது.
வீழ்ச்சியடைந்த நாட்டினை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது அவர் மிக விரைவாக
மீட்டிருந்தார் .”என்றார்
செய்தி – திலீபன்