முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணிலின் குற்றச்சாட்டுக்கு பதிலடி வழங்கியுள்ள ஜனாதிபதி அநுர

Courtesy: Sivaa Mayuri

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கூற்றுக்களை மறுத்துள்ள, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்குத் தேவையான நிதியை ரணில் விக்ரமசிங்கவின்  அரசாங்கம் ஒதுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார, பல்வேறு செலவினங்களுக்கான மேலதிக நிதி, வரவு செலவுத் திட்டம் அல்லது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் கணக்கு வாக்கெடுப்பு மூலம் நிதி ஒதுக்கப்படுவது வழமையாகும்.

அமைச்சரவை தீர்மானம்

எனினும் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புக்கு சில நாட்களுக்கு  முன்னர் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான தீர்மானம், ரணில் விக்ரமசிங்கவினால் அவசரமாக எடுக்கப்பட்டதாக  சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணிலின் குற்றச்சாட்டுக்கு பதிலடி வழங்கியுள்ள ஜனாதிபதி அநுர | President Anura Responded To Ranil Accusation

பொதுத் துறையினரின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை தீர்மானம், செப்டெம்பர் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற அஞ்சல் மூல வாக்களிப்புக்கு முன்னதாக செப்டம்பர் 3 ஆம் திகதி எடுக்கப்பட்டது.

எனினும் நிதி ஒதுக்கப்படவில்லை என்று அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அரச துறையினரின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு 2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நிதியை ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்