எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் அடுத்து என்ன அடுத்து என்ன என ரசிகர்களை புலம்ப வைக்கும் வகையில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.
ஜனனி, ரேணுகா, நந்தினி புதிய தொழிலை தொடங்க கூடாது என குணசேகரன் தலைமறைவாக இருந்தாலும் நிறைய வேலை செய்கிறார்.

முதலில் ஜனனியை வீட்டைவிட்டு அனுப்ப நினைத்தார் நடக்கவில்லை, அறிவுக்கரசியை வைத்து வண்டியை எரிக்க வைத்தார் அதுகூட நடக்கவில்லை.
பின் ஜனனி வாங்கிவந்த வண்டியை தூக்க நினைத்தார் அதுவும் நடக்கவில்லை. இதற்கு இடையில் ஞானம்-கதிருக்குள் பிரச்சனை ஏற்படுவதாக தெரிகிறது.

புதிய வீடு
இந்த தொடரில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கோபத்திற்கு ஆளாகி வருபவர் தான் விபுணன். ஊட்டியை சேர்ந்த இவர் தனது சொந்த ஊரில் புதிய வீடு ஒன்று கட்டியுள்ளார்.

புதிய வீட்டின் பூஜை முடிந்ததும் சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டு இந்த நல்ல விஷயத்தை அறிவித்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் விபுணனுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.


