முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணிலையும் அரசையும் மக்கள் ஓட ஓட விரட்டியடிப்பார்கள்! சுமந்திரன் எம்.பி எச்சரிக்கை

அதிபர் தேர்தலை குழப்பி பிற்போட முயற்சித்தால் சிறிலங்கா (Sri Lanka) அதிபரையும் இந்த அரசையும் மக்கள் ஓட ஓட
விரட்டியடிப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) அரச தரப்பைப் பார்த்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு, அதிபர் தேர்தல் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தியாக வேண்டும்,
அதுதான் அரசமைப்பு ஏற்பாடு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் தேர்தல் விடயம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்று (11) நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையின் மீது உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதிபரின் பதவிக்காலம்

இது தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் மேலும் கருத்து தெரிவிக்கையில், “சிறிலங்கா அதிபரின் பதவிக்காலம் 5 வருடங்கள் தான் என்பது அரசமைப்பிலும் தெளிவாக
உள்ளது. அதை இப்போது உயர் நீதிமன்றமும் தெளிவுபடுத்தி விட்டது.

ரணிலையும் அரசையும் மக்கள் ஓட ஓட விரட்டியடிப்பார்கள்! சுமந்திரன் எம்.பி எச்சரிக்கை | President Election Sumanthiran Parliment Speech

இந்தநிலையில் அதிபர் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான அரசமைப்புப் பிரிவுகளில்
மாற்றம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டிய தேவை எதுவும் இல்லை.

அதிபரின் பதவிக்காலத்தை ஆறு வருடங்களுக்கு மேல் நீடிப்பதாயின் சர்வஜன
வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற அரசமைப்பின் 83 (ஆ) பிரிவு
இவ்விடயங்களில் சம்பந்தப்பட்டது அல்ல.

அதை மாற்றி அமைக்க வேண்டிய தேவையும்
இல்லை. அதை மாற்றி அமைப்பதாயின் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவை என்ற கருத்து
இருந்ததாலேயே 19 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டபோது அதை மாற்றாமல் அப்படியே
விடுகின்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதிபரின் பதவிக்காலம் 

அப்போது பிரதமராக இருந்த ரணில்
விக்ரமசிங்கவின்  (Ranil Wickremesinghe) இணக்கத்தோடு தான் அப்படியே அதை விட்டு விட முடிவு
எடுக்கப்பட்டது. அதனால் சர்ச்சைகளோ குழப்பங்களோ ஏதுமில்லை.

ரணிலையும் அரசையும் மக்கள் ஓட ஓட விரட்டியடிப்பார்கள்! சுமந்திரன் எம்.பி எச்சரிக்கை | President Election Sumanthiran Parliment Speech

ஏற்கனவே சிறிலங்கா அதிபரின் பதவிக்காலம் 5 வருடங்கள்தான் என்பது திட்டவட்டமாகத்
தீர்மானிக்கப்பட்ட விடயம். இந்த 83 (ஆ)பிரிவு அரசமைப்பில் இருப்பதால் எந்தக்
குழப்பமும் புதிதாக வந்து விடாது.

ஆனால், இந்தப் பிரிவுக்கு திருத்தம் கொண்டு வருகின்றோம் என்று குழம்பத்தை
ஏற்படுத்த அதிபரின் தரப்பு முயலுகின்றனர் என்று தோன்றுகின்றது.

சர்வஜன வாக்கெடுப்பு 

அந்தப்
பிரிவைத் திருத்த சர்வஜன வாக்கெடுப்பு என்ற நிலைப்பாடு வருமானால், அதைக்
காட்டி தம்முடைய பதவிக்காலம் 5 வருடங்கள்தானா என்பதை ஒட்டிய சர்ச்சையைக்
கிளப்பலாம் என்று அதிபர் எண்ணுகின்றார்.

ரணிலையும் அரசையும் மக்கள் ஓட ஓட விரட்டியடிப்பார்கள்! சுமந்திரன் எம்.பி எச்சரிக்கை | President Election Sumanthiran Parliment Speech

எது, எப்படி என்றாலும், நாடு வரும் ஒக்டோபர் 17 இற்கு முன்னர் அதிபர் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. அது சட்ட ரீதியான கட்டாயம்.

அதில்
கை வைக்க அல்லது தேர்தலைத் தள்ளிப்போட முயற்சி எடுக்கப்பட்டால் அரசையும் அதிபரையும் மக்கள் வீதி வீதியாக துரத்தி அடிப்பார்கள். ஓட ஓட
விரட்டுவார்கள். அதனை முன் எச்சரிக்கையாகக் கூறி வைக்க விரும்புகின்றேன்.” என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.