ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகள் குறித்து ஆராய்வதற்காக, சட்டமா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு அதிகாரிகளுடன் சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த தகவலை அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று நாடாளுமன்றில் வெளியிட்டுள்ளார்.
வசந்த சமரசிங்க
கொலைகளில் தொடர்புடைய எந்தவொரு நபரையும் விடுவிப்பதில் அரசாங்கம் சட்ட நடைமுறையாக்கல் அதிகாரிகளின் செயற்பாடுகளில் தலையிடாது என்று அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இடம்பெற்ற கொலைகள் குறிப்பாக, கடந்த கால அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் குறித்து நீதி கிடைப்பதில் அரசாங்கம் உறுதியுடன் செயற்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.