அதிபர் தேர்தல் பிற்போடப்படலாம் என அரசாங்கத்திலுள்ள சில கட்சிகள் பல்வேறு செய்திகளை உருவாக்கினாலும், அரசியலமைப்பின் பிரகாரம் அதிபர் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்(S.M. Marikkar) தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“இந்நாட்களில் அதிபரின் பதவிக் காலம் மேலும் ஒரு வருடத்தினால் நீடிக்கப்படலாம் என்ற செய்தி அரசாங்கத்தினால் விதைக்கப்பட்டு வருகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் முடிவை அறிவித்த மகிந்த
நல்லாட்சி அரசின் காலத்தில்
1977 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம் அதிபருக்கு 06 வருடங்கள் இருந்தது என்பதை நாம் தெளிவாக கூற வேண்டும். ஆனால் 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் வந்து 19வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அதிபரின் பதவிக்காலம் 05 வருடங்களாகக் குறைக்கப்பட்டிருந்த போது மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) அதிபராக பதவியேற்கும் போது 19ஆவது திருத்தம் வரவில்லை.
அதனால் கோட்டாபய ராஜபக்ச (Gotapaya Rajapaksa) 05 வருடங்கள் அதிபராக வந்தார்.
எனவே,ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), கோட்டாபய ராஜபக்சவின் வாரிசு அதிபரானார். இதன்படி, அவர் கோட்டாபய ராஜபக்சவின் எஞ்சிய பதவிக் காலத்திற்கு மட்டுமே நீடிக்க முடியும்.
தமிழ் மக்களை ஏமாற்றும் சஜித் : சோபித தேரர் கொந்தளிப்பு
எக்காரணம் கொண்டும் ரணிலுக்கு முடியாது
எனவே, அவர் எக்காரணம் கொண்டும் 6 ஆண்டுகள் தங்க முடியாது. மற்றொன்று, சர்வஜன வாக்கெடுப்பு என்று அரசாங்கம் மைண்ட் கேம் விளையாடுகிறது. சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதற்கு முன், மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் பெறப்பட வேண்டும்.
அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை எங்கே உள்ளது. இந்த அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பங்கு இல்லை.
எனவே அடுத்த மாதம் 16ஆம் திகதிக்கு பின்னர் அதிபர் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு நிச்சயமாக கிடைக்கும். இது ரணில் விக்ரமசிங்கவின் கட்டுப்பாட்டில் அல்லது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. மேலும், கண்டிப்பாக ஒக்டோபர் 16 முதல் செப்டம்பர் 16 வரை தேர்தல் நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |