இங்கிலாந்து கால்பந்து அணி FIFA உலகக் கோப்பை அரையிறுதியில் அர்ஜென்டினாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இளவரசர் ஹரி தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நியூயார்க் நகரில் நடைபெற்ற TIME100 Sports Gala விழாவில் பங்கேற்ற ஹரியிடம், இங்கிலாந்தின் தோல்வி குறித்து வருத்தமா என்று கேட்டபோது, “நிச்சயமாக” என்று சுருக்கமாக இளவரசர் பதிலளித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவின் அதிரடியான மீள்வரவு ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
டேவிட் பெக்கம்
இங்கிலாந்தின் தோல்வியால் ஹரி மட்டுமல்ல, கால்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்கமும் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டிருந்தார்.

அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற போட்டியை நேரில் கண்ட டேவிட் பெக்கம் கண்ணீருடன் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்திய காணொளி பரவலாக பகிரப்பட்டது.
இவ்வாறான நிலையில் தற்போது ஹரியின் கருத்து ஊடகங்களின் கவனத்தை பெற்றுள்ளது. ஹரியின் மூத்த சகோதரர் இளவரசர் வில்லியமும் சமூக வலைதளமான X-ல் தனது ஏமாற்றத்தை பகிர்ந்துள்ளார்.
“இங்கிலாந்து வீரர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள். அவர்களை நினைத்து நாம் அனைவரும் பெருமைப்படுகிறோம்.
இந்த தொடரில் அவர்கள் காட்டிய போராட்டமும் நம்பிக்கையும் அனைவருக்கும் ஊக்கமளித்துள்ளது. இந்த அணியே சமீப காலங்களில் மிகவும் முழுமையான இங்கிலாந்து அணி,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Source: https://ibctamil.com/article/prince-harry-urukkam-on-england-s-defeat-1784274357

