கடந்த நவம்பர் மாதம் 04 ஆம்திகதி, 2024 முதல் கொழும்பு(colombo) கொட்டஹேன பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்படும் 69 வயதுடைய ஒருவரைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளளர்.
காணாமல் போனவரின் மகள் அளித்த புகாரின் அடிப்படையில் கொட்டஹேன காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள அறிவிப்பு
காணாமல் போனவர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள் 071 – 8591571 அல்லது 011- 2431861 என்ற தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.