புஷ்பா 2
பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட வெளிவந்துள்ள புஷ்பா 2 படம், வசூல் வேட்டையாடி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பற்றி பார்க்கலாம் வாங்க. இயக்குனர் சுகுமார் – அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவான திரைப்படம் புஷ்பா. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து புஷ்பா 2 படம் நேற்று வெளிவந்தது.
சூர்யாவின் 45வது படத்தில் அவருடைய ரோல் இதுவா? மாஸ் அப்டேட் இதோ
இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். மேலும் சாம் சி எஸ் இப்படத்திற்கு பின்னணி இசை அமைத்திருந்தார். மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் புஷ்பா 2, உலகளவில் ரூ. 275 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
தமிழக வசூல் விவரம்
இந்த நிலையில், தமிழ்நாட்டில் புஷ்பா 2 படம் முதல் நாள் மட்டுமே ரூ. 8.5 கோடி வரை வசூல் செய்துள்ளது. முதல் நாள் தமிழ்நாட்டில் இப்படத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.