கனடாவில் (Canada) தொடருந்து ஊழியர்கள் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
கனடா முழுவதிலும் உள்ள சரக்கு தொடருந்துகளை இயக்கும் 9,000 தொடருந்து ஊழியர்களே இவ்வாறு வேலை நிறுத்தித்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அங்குள்ள சரக்கு தொடருந்து போக்குவரத்துக்கள் முற்றாக ஸ்தம்பிக்கும் அபாயம் காணப்படுவதகா தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டு ஏற்றுமதி
இந்த நிலையில், குறித்த வேலைநிறுத்தத்தின் இழப்புகள் மற்றும் பின்விளைவுகள் கனேடியர்கள் மீதே செலுத்தப்படும் என்று டரல் அரசு எச்சரித்துள்ளது.
கனடாவில் நாளொன்றுக்கு ஒரு பில்லியன் டொலர்கள் மதிப்புடைய பொருட்களை சரக்கு தொடர்ருந்துகள் சுமந்து செல்வதோடு, அந்நாட்டின் பாதி ஏற்றுமதிகள் அதன் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது.
கனேடிய பொருளாதாரம்
இவ்வாறானதொரு பின்னணியில், தொடருந்து ஊழியர்களின் இந்த தீர்மானம் கனேடிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என
தொழில்துறையினர்களும் எச்சரித்துள்ளனர்.
எனினும், தங்களின் கோரிக்கைகள் கருத்தில் கொள்ளப்படாவிட்டால் எந்த முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை என தொடருந்து ஊழியர்களின் யூனியன் குறிப்பிட்டுள்ளது.