அரசியல்வாதிகள் பலருக்கு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஹிருணிக்கா பிரேமசந்திர ஆகியோரை உள்ளே அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி மறுப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே நீதிமன்ற வளாகத்திற்கு செல்ல அனுமதி என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் அவர்களுக்கு அனுமதி மறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகம் முற்று முழுவதுமாக நிரம்பியுள்ளதாலும் பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

