முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அல்ஜசீரா எழுப்பிய கேள்வி! ரணிலின் குடியுரிமையை குறிவைக்கும் அரசியல்வாதி

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் குடியுரிமை பறிக்கப்படுமா அல்லது அவர் மீது வழக்கு தொடரப்படுமா என்று முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவக்க கேள்வியெழுப்பியுள்ளார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய குடியரசு முன்னணியில் விகாரை சின்னத்தில் கொழும்பில் களமிறக்கப்படவுள்ள வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையெழுத்திடும் நிகழ்வு நேற்று(15) இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது சம்பிக ரணவக்க இதனை தெரிவித்துள்ளார்.

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை 

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் அரசாங்கம் அதன் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.

அல்ஜசீரா எழுப்பிய கேள்வி! ரணிலின் குடியுரிமையை குறிவைக்கும் அரசியல்வாதி | Ranil Citizenship Be Revoked

இந்த நடவடிக்கைகள் அரசியல் நோக்கத்திற்காக முன்னெடுக்கப்படவில்லை. அரசியல் நோக்கம் இருந்திருந்தால், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனேயே இவ்வாறான விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கும். இது அல் ஜசீரா எழுப்பிய கேள்வியால் ஏற்பட்ட விளைவாகும்.

இந்த அரசாங்கம் எதிர்கொண்ட மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், இந்தக் குறிப்பிட்ட அறிக்கைகளை பொதுமக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும், குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் முறையாக விளக்கவில்லை. அல்ஜசீரா நேர்காணலிலும் இதுவே இடம்பெற்றது.

சுயாதீன ஆணைக்குழு

எவ்வாறிருப்பினும் இதனை ஒரு சாரார் மீது மாத்திரம் சுமத்துவது பொறுத்தமானதென நாம் கருதவில்லை. 1987 முதல் 1990 வரை இரு தரப்புக்களுமே இவ்வாறு கொலை செய்யும் போட்டிகளிலேயே இருந்தனர்.

அந்த வகையில் கொலைகளில் ஜே.வி.பி.யும் அன்று பங்கேற்றது. எனவே அவர்களுக்கும் இவ்விவகாரத்தில் பொறுப்பிருக்கிறது.

அல்ஜசீரா எழுப்பிய கேள்வி! ரணிலின் குடியுரிமையை குறிவைக்கும் அரசியல்வாதி | Ranil Citizenship Be Revoked

அந்தப் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. மறுதரப்பும் அதையே செய்தது. அந்த தரப்பு அதிக எதிரிகளைக் கொன்றதால் அவர்கள் வெற்றி பெற்றனர் என்று கூறப்படுகிறது.

அதற்காகத்தான் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என்றால், தனித்தனி இடங்களில் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதற்குப் பதிலாக, இரு தரப்பினரும் செய்த கொலைகளை விசாரிக்க ஒரு முறையான சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும்.” என கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.