முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒழுக்காற்று விசாரணை
அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் காரணமாகவே இந்த ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


