முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விரட்டியடிக்கப்பட்ட ராஜபக்ச குடும்பத்தினர்: ரணிலை குற்றம்சாட்டும் எம்.பி!

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) தந்திரங்களுக்கமைய இலங்கையின் அரசியலில் இருந்து ராஜபக்ச குடும்பத்தினர் விரட்டியடிக்கப்பட்டதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.   

ரணில் விக்ரமசிங்கவுக்கு தனக்கான வாக்குகளை சேகரிக்கும் செயல்முறையில் ராஜபக்ச குடும்பத்தினர் தடையாக இருந்தததாகவும் இதனடிப்படையில் குறித்த சதித்திட்டங்களை அவர் முன்னெடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

கொழும்பில் (Colombo) உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, உதய கம்மன்பில இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

அதிபர் வேட்பாளர்

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இலங்கையில் (Sri Lanka) இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் வேட்பாளராக களமிறங்காவிட்டால், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க ஏன் சுற்றுப்பயணங்களை மேற்கொள்கிறார்?

விரட்டியடிக்கப்பட்ட ராஜபக்ச குடும்பத்தினர்: ரணிலை குற்றம்சாட்டும் எம்.பி! | Ranil Ousted Rajapaksa Family From Sl Polictics

கட்சி கூட்டங்களை எதற்காக நடத்துகிறார்? கட்சி அலுவலகங்களை ஏன் திறக்கிறார்? எதற்காக சம்பளத்தை அதிகரிக்கிறார்?

மக்களுக்கு ஏன் திடீரென அதிக நிவாரணங்களை வழங்குகிறார்? பிரச்சார நடவடிக்கையாகவே அவர் குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார்.

ரணிலின் தந்திரங்கள் 

இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் தந்திரங்கள் தொடர்பில் அனைவருக்கும் விளக்க வேண்டியது எனது கடமை.

விரட்டியடிக்கப்பட்ட ராஜபக்ச குடும்பத்தினர்: ரணிலை குற்றம்சாட்டும் எம்.பி! | Ranil Ousted Rajapaksa Family From Sl Polictics

அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் தற்போது ரணில் விக்ரமசிங்க மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அதிலிருந்து முதலாவது இடத்துக்கு வர தற்போது அவர் முயற்சித்து வருகிறார்.

இதன் ஒரு அங்கமாக எதிர்க்கட்சி உறுப்பினர்களை தம்முடன் இணைத்து கொள்ள ரணில் விக்ரமசிங்க முயற்சிக்கிறார்.

ராஜபக்ச குடும்பத்தினர்

அத்துடன், ராஜபக்ச குடும்பத்தினரை அரசியலில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளை ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துள்ளார்.

எனினும், தற்போது ரணில் விக்ரமசிங்கவை விட்டு விலகுவது தமது அழிவுக்கு வழி வகுக்குமென்பதை ராஜபக்சக்கள் (Rajapaksa’s) நன்கு அறிந்திருக்கிறார்கள்.

இதேவேளை, கடந்த காலங்களை போல இந்த ஆண்டிலும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது எதிர்க்கட்சித் தலைவர் தவறான வாரத்தைகளை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலை தொடரும் பட்சத்தில், முதலாவது இடத்தில் உள்ள அவர் மூன்றாவது இடத்துக்கும், மூன்றாவது இடத்தில் உள்ள ரணில், முதலாவது இடத்துக்கும் செல்வார்கள்.

ரணிலுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்காதிருக்க எதிர்க்கட்சித் தலைவர் தெரிந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.