முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணிலின் முதல் பேருந்து பயணம்!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலி்ல் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தற்போது அவரது உடல்நிலை தேரி வரகிறது என ஒரு சாராரும், தீதிர சிகிச்சை வழங்கப்படுகிறது என ஒரு சாராரும் கூறி வருகின்றனர்.

மற்றொரு கதை அவரை சிங்கபூருக்கு விசேட மருத்துவ தேவைக்காக அழைத்து செல்வதாக.

இந்த கதைகளை போல பல கருத்துக்கள் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை நீடிக்கும் என்பதே நிதர்சனம்.

முதல் பேருந்து பயணம்

ரணில் விக்ரமசிங்க கடந்த 76 ஆண்டுகளில் பெறாத அனுபவத்தை கடந்த 22 ஆம் திகதி பெற்றிருந்தார்.

ஆம். அது அவரின் முதல் பேருந்து பயணம்.

76 வருட வாழ்க்கையில், ரணில் ஒருபோதும் பேருந்தில் பயணம் செய்ததில்லை.

அவரது முதல் பேருந்து பயணம் சிறைச்சாலை பேருந்தில் நடந்தது. அதுவும் கைகளில் கைவிலங்கிடப்பட்ட நிலையில்.

ரணில் எங்கு சென்றாலும் அவருடன் ஒரு பாதுகாப்பு பரிவாரங்கள் பின்தொடர்வார்கள்.

அவ்வாறே கடந்த 22 ஆம் திகதி ரணில் பயணித்த பேருந்துக்கும் விசேட பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கப்பட்டிருந்தனர்.

ஆனால் இங்கு சிறைச்சாலை பேருந்தென்பதால் சிறை காவலர்கள் அவருக்கு பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.

மிஸ்டர் கிளீன்

நாட்டின் மிகவும் சலுகை பெற்ற வகுப்பினரான அல்லது’மிஸ்டர் கிளீன்’ என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்ட ரணில் விக்ரமசிங்க கடந்த 22 ஆம் திகதி நாட்டின் பொதுப் பணத்தை குற்றவியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார் .

நேற்று முன்தினம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவரது தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது அரவது ஆதரவாளர்களக்கு பேரதிர்ச்சியாக இருந்திருக்ககூடும்.

நீதிபதி நிலுபுலி லங்காபுர அவரது பிணையை நிராகரித்து 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட பிறகு, ரணில் தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று ‘போகலாம்’ என்று கூறி வெளியேறத் தயாராகியதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட ரணில் சிறை மருத்துவமனையில் இரவைக் கழித்த பின் நேற்று சிறை மருத்துவமனையில் உள்ள ஒரு சிறப்பு மருத்துவரின் பரிந்துரையின் பேரில், அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் ETU (அவசர சிகிச்சை பிரிவு) க்கும், அங்கிருந்து காலையில் ICU (தீவிர சிகிச்சை பிரிவு) க்கும் மாற்றப்பட்டார்.

அவர் தற்போது ICUவில் இருக்கிறார். இவ்வளவு நோய்களால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் இரண்டு நாட்களில் இந்தியாவுக்குச் செல்ல திட்டமிட்டது என்ற கதை முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தியாவுக்குச் செல்ல திட்டமிட்டது கதை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன பிரேமரத்ன ரணிலுக்கு ஆதரவாக வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பில் பேசுபொருளாகியுள்ளது.

முந்தைய உயர் நீதிமன்ற தீர்ப்புகளால் விக்ரமசிங்க ஏற்கனவே இதேபோன்ற குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

தற்போதைய குற்றச்சாட்டு முன்னுதாரணத்தைப் பற்றியது அல்ல, மாறாக பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியது பற்றியது.

அனுஜ பிரேமரத்ன தனது வாதத்தில், விசாரணை தொடக்கத்திலிருந்தே குறைபாடுடையது என்றும், “தற்போதைய ஜனாதிபதியின் செயலாளரின் கருத்துக்களால் இது தூண்டப்பட்டது என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கறைபட்டது என்றும் அவர் வாதிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் முழு வழக்கையும் ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என வாதிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் பிரதிவாதியின் குற்றங்களை விளக்கிய சட்டமா அதிபர் திணைக்கள வாதங்கள் ரணிலுக்கான பிணை மீது அதில் அவநம்பிக்கையை தோற்றுவித்துள்ளது.

ரணிலுக்கு, “76 வயது, இதய நோய், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்” என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

அவரது மனைவி, புற்றுநோய் நோயாளி என்றும் கூறப்பட்து.

குழந்தைகள் இல்லாததால், அவர்கள் ஒருவரையொருவர் சார்ந்து இருந்தனர் என பிரேமரத்னவின் வாதங்களால் விளக்கப்பட்டது.

அந்த வேண்டுகோள் ஒரு அனுதாப உணர்வைத் தூண்டியிருக்கலாம். ஆனாலும் நீதிக்கான வலிமையை எடுத்துகூறவேண்டும் என குறிப்பிட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தால், ரணிலுக்கான சிகிச்சை சிறைச்சாலை மருத்துவமனையிலும் கிடைக்கும் என வாதிடப்பட்டது.

இதன்படி இன்று இந்தியாவில் நடைபெறும் காமன்வெல்த் இளைஞர் மன்றத்தில் விக்ரமசிங்க தலைமை விருந்தினராக கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பிரேமரத்ன அறிவித்தார்.   இது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கடமையாகும்.

இதனால் அவர் விடுவிக்கப்பட்ட வாய்ப்பிருந்ததாக கருதப்பட்டது.

இருப்பினும், சில மணி நேரங்களுக்குள், அத்தகைய அழைப்பு எதுவும் கிடைக்கப்பெறவில்னை என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சர்வதேச தொடர்புகள்

இதற்கிடையில், ரணிலின் நிலைமை குறித்து தூதர்களுக்குத் தெரிவிப்பதன் மூலம் அரசாங்கத்தின் மீது சில அழுத்தங்கள் பிரியோகிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஐ.தே.க. தலைவர்கள் மற்றும் கொழும்பு உயரடுக்கில் உள்ளவர்கள் ரணிலுக்கு சிறந்த சர்வதேச தொடர்புகள் இருப்பதாக நினைத்து இந்த கருத்துக்களை வெளியிட்டிருக்ககூடும்.

ட்ரம்ப் வரி சம்பவத்தின் போது, ​​’ரணில் இருந்திருந்தால், அவர் ட்ரம்பிற்கு ஒரு முறை அழைப்பு விடுத்து பிரச்சினையைத் தீர்த்திருப்பார்’ என்று ஐ.தே.க.தரப்பினர். பகிரங்கமாகக் கூறியிருந்தனர்.

இது அவர் தனது ஆட்சிக்காலத்தில் சர்வதேச தொடர்புகளை வளர்த்துக்கொண்ட விதத்தின் எதிர்பார்ப்புக்களாக கூட இருந்திருக்களாம்.

ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததைபோல் சர்வதேசத்தின் பார்வை ரணில் பக்கம் திரும்பவில்லை என்றே கூறியாகவேண்டும்.

இலங்கையின் மீது அதிக செல்வாக்கு செலுத்தக்கூடிய தூதரகங்கள்தான் பிரதானமானவை. அந்த தூதர்கள் யாரும் இதற்கு பதிலளிக்க வரவில்லை.

உண்மையில், தூதர்கள் ரணிலை ஏமாற்றவில்லை.

மேலும், இன்றுவரை, அனைத்து முக்கிய சர்வதேச ஊடகங்களும் இலங்கை பொருளாதார ரீதியாக திவாலான நிலையில், முன்னாள் ஜனாதிபதி தனது குடும்ப நலனுக்காக மில்லியன் கணக்கான பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக சம்பவத்தை செய்தியாக வெளியிட்டுள்ளன.

அத்தகைய சூழ்நிலையில், அவரை ஆதரிக்க தயாராக ஒருவர் வந்தால் அவர் மற்றொரு மோசடியாளராகவே சர்வதேசத்தின் முன் கருதப்படுவார்.

சலுகை மந்திரம்

அரசியல் சலுகை பெற்ற வர்க்கம் மற்றும் கொழும்பு உயரடுக்கின் மற்றொரு மந்திரம் ரணிலின் கைதில் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதாவது, அநுரவின் அரசாங்கம் ரணில் செய்ததையே செய்கிறது, யார் அதைத் தொட்டாலும், யாரும் ரணிலைத் தொட முடியாது என கூறிவந்தது.

ரணில் செய்ததை அனுரவின் அரசாங்கம் தொடர்ந்து செய்தால், ரணில் சிறைக்குச் செல்ல வேண்டியதில்லை.

ரணிலை விடுவிக்க வேண்டும், சட்டம் ரணிலைத் தவிர அனைவருக்கும் பொருந்தும் என்பதே பொருளாகியிருக்கும்.

ஆனால் இறுதியில், ரணிலைத் தொட்டது அநுரவின் அரசாங்கம் அல்ல, மாறாக சட்டத்திற்கு அப்பாற்பட்ட யாரும் இல்லாத ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப நாட்டிற்கு அளித்த வாக்குறுதியாகும்.

அநுர அடிக்கடி கூறும் ஒரு பழமொழி உண்டு. “எல்லோரும் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பது மட்டுமல்ல, அனைவரும் சட்டத்திற்கு பயப்பட வேண்டும்.” என்பதே.

சலுகை பெற்ற வர்க்கமும், கொழும்பு உயரடுக்கும் ரணிலை வைத்து தனது அரசியல் தாகத்தை தீர்த்துக்கொள்ள வைத்திருந்த சிறிதளவு நம்பிக்கையம் ரணில் சிறைக்குச் சென்ற பிறகு ஆவியாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.