ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியையும், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைப்பதற்குரிய பேச்சு அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரு தரப்பினரையும் இணைப்பதற்கு இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட பேச்சுகள் தோல்வி அடைந்த நிலையில், இதுவே கடைசி முயற்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.
பேச்சு வெற்றியளிக்கும் பட்சத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டாக களமிறங்குவதற்கும், அவ்வாறு இல்லையேல் தனிவழி செல்வதற்கும் இரு தரப்புகளும் அவதானம் செலுத்தியுள்ளன.
அரசியல் வட்டாரத் தகவல்கள்
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய வேண்டும் என்ற கோரிக்கை ஐக்கிய மக்கள் சக்திக்குள் அதிகரித்துள்ளதால், அந்தக் கோரிக்கையை நிராகரிக்க முடியாத நிலை சஜித் பிரேமதாஸவுக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, இரு தரப்பு இணைவுக்குரிய சாத்தியம் அதிகமாக உள்ளது எனவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.