முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணிலையடுத்து ராஜபக்சர்களா..! அமைச்சர் கொடுத்த சமிக்ஞை

ராஜபக்சர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டாலும் அரசியல் பழிவாங்கள் என்றா குறிப்பிடுவார்கள் என்று அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மாத்தறை பகுதியில் இடம்பெற்ற  கூட்டமொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

ரணிலை பழிவாங்கவில்லை.. 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பழிவாங்குவதற்கான தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதற்காகவே அவர் கைது செய்யப்பட்டார். இதனை எவ்வாறு அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிடுவது.

ரணிலையடுத்து ராஜபக்சர்களா..! அமைச்சர் கொடுத்த சமிக்ஞை | Ranil Wickremesinghe Arrested Rajapaksa Family Now

ராஜபக்சர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளினார்கள் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தாலும் அதனையும் அரசியல் பழிவாங்கல் என்றா குறிப்பிடுவார்கள்.

கடந்த கால ஆட்சியாளர்கள் அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதால் தான் இந்த நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையை அடைந்தது என்பதை நாட்டு மக்கள் மறக்கக் கூடாது.

நாட்டு மக்கள் உணர வேண்டிய உண்மை

சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடும் எதிர்க்கட்சியினர் முன்னாள் ரணில் விக்ரமசிங்கவுக்கு சட்டத்தில் விலக்களிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள்.

ரணிலையடுத்து ராஜபக்சர்களா..! அமைச்சர் கொடுத்த சமிக்ஞை | Ranil Wickremesinghe Arrested Rajapaksa Family Now

இவர்களின் ஆட்சியில் சட்டம் எவ்வாறு செயற்படுத்தப்பட்டிருக்கும் என்பதை நாட்டு மக்கள் ஆராய வேண்டும்.

ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் வலியுறுத்துகின்ற நிலையில் எதிர்க்கட்சியினர் சட்டத்தின் முன் பாரபட்சம் பார்க்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள்.

பல குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் தான் இன்று ஒரு அணிக்கு திரண்டுள்ளார்கள். ஊழல் மோசடியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிடுவது ஒன்றும் புதிதல்ல, நாட்டு மக்கள் உண்மையை விளங்கிக்கொள்ள வேண்டும்  என குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.