சச்சின்
விஜய்யின் கரியரில் மிகப்பெரிய வசூல் செய்த படங்கள் பல உள்ளன. ஆனால், பெரிய வசூலை செய்யவில்லை என்றாலும், ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ள படம் தான் சச்சின்.
இப்படத்தை இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கியிருந்தார். இவர் இயக்குநர் மகேந்திரனின் மகன் ஆவார். மேலும் சச்சின் இவருடைய முதல் திரைப்படமாகும்.
குட் பேட் அக்லி படம் உலகளவில் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா, இதோ பாருங்க
மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார். வடிவேலு, சந்தானம், ரகுவரன் என இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.
வசூல் விவரம்
2005ம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை தற்போது 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ ரிலீஸ் செய்துள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு.
கடந்த வாரம் திரையில் வெளிவந்த இப்படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் 5 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் இப்படம் உலகளவில் ரூ. 7.2 கோடி வசூல் செய்துள்ளது.