முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கில் இடர்களை எதிர்கொள்ள தயார்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

எதிர்வரும் நாட்களில் வடக்கு மாகாணத்தில் இடர் பாதிப்புக்கள் ஏற்படுமாக
இருந்தால் அவற்றை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருப்பதாக துறைசார்
திணைக்களத் தலைவர்கள் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம்
தெரிவித்துள்ளனர்.

பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர்
செயலகத்தில் நேற்று(22.11.2024) இடம்பெற்றுள்ளது.

இடர் நிலைமை

வடக்கு ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்,“ எதிர்வரும்
நாள்களில் தாழமுக்கம் ஒன்று வங்கக் கடலில் உருவாகலாம் என்று
எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

அதன் நகர்வுப் பாதை சரியாக இன்னமும் கணிக்கப்படவில்லையாயினும், நாம் அதை எதிர்கொள்ளும் வகையில் ஆயத்தங்களுடன்
இருக்கவேண்டும்.

பருவமழை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் – செப்டெம்பர் மாதத்துக்கு முன்னதாக, எமது பிரதேசத்திலுள்ள வாய்க்கால்கள் அனைத்தும்
துப்பரவாக்கப்பட்டிருக்கவேண்டும். 

வடக்கில் இடர்களை எதிர்கொள்ள தயார்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் | Ready To Face The Dangers In The North

சில இடங்களில் வாய்க்கால்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர்.
அவற்றை சட்டரீதியாக அணுகி உடனடியாக இடித்து அகற்றுங்கள். தேவையேற்படின் காவல்துறையினரின் உதவியையும் பெற்றுக்கொள்ளுங்கள். 

அதேநேரம்,  பல இடங்களில் வாய்க்கால்களுக்குள்,
வீதிகளில் மக்கள் குப்பைகளை வீசுகின்றார்கள்.

அவர்களுக்கு எதிராக
சட்டநடவடிக்கை எடுப்பதுதான் வழி. பல தடவைகள் விழிப்புணர்வுகளை
செயற்படுத்தியும் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படாவிட்டால், சட்ட நடவடிக்கை
ஊடாக தண்டிக்க வேண்டும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரப் பணிப்பாளரின் கோரிக்கை 

அத்துடன், இடர் நிலைமையின் போது தீவகத்திலுள்ள நோயாளர்களை மருத்துவமனைக்கு கொண்டு
செல்வதற்கான உதவிகளை கடற்படையினர் மேற்கொள்ளவேண்டும் எனவும், கடல் மார்க்கமாக
பயணிக்கமுடியாத நிலைமை ஏற்பட்டால் விமானப்படையினர் உதவவேண்டும் என்றும்
சுகாதாரப் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இடர் நிலைமைகளை எதிர்கொள்வதற்காக கடற்படையினரின் 16 குழுக்கள்
படகுகளுடன் தயாராக இருப்பதாகவும் மேலதிகமாக தேவைப்பட்டால் அதையும் பெற்றுக்
கொள்ளக்கூடிய தயார் நிலையில் தாம் இருப்பதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் இடர்களை எதிர்கொள்ள தயார்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் | Ready To Face The Dangers In The North

மேலும், எதிர்வரும் இடர் நிலைமைகளின் போது பொதுமக்கள் இடர்முகாமைத்துவப் பிரிவின் 117
என்ற இலக்கத்துக்கு தொடர்புகொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, யாழ். மாவட்டத்தில் 021 222 1676, 0773957894 என்ற இலக்கங்களுக்கும், கிளிநொச்சி
மாவட்டத்தில் 021 228 5330, 0772320528 என்ற இலக்கங்களுக்கும், முல்லைத்தீவு
மாவட்டத்தில் 021 229 0054 என்ற இலக்கத்துக்கும், மன்னார் மாவட்டத்தில் 023
211 7117 என்ற இலக்கத்துக்கும், வவுனியா மாவட்டத்தில் 0760994883 என்ற
இலக்கத்துக்கும் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.