முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள தயார் : ரஷ்ய ஜனாதிபதி புடின்

உக்ரைன் (Ukraine) விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும், உக்ரைன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை என்றும் ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார்.

நேட்டோ அமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷ்யா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் விநியோகம், பொருளாதார உதவிகளை வழங்குகின்றன.

அதேபோல் ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடுகளான சீனா, வட கொரியா போன்றவை ஆதரவாக செயற்படுகின்றன.

ரஷ்யா மீது தாக்குதல்

தற்போது உக்ரைனுக்குள் நுழைந்து ரஷ்யா படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேபோல் உக்ரைனும், ரஷ்யா படைகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றன.

உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள தயார் : ரஷ்ய ஜனாதிபதி புடின் | Russia Ukraine War Update

இந்த சூழலில் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்பட பலநாடுகள் முயன்றன. ஆனால் ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் இன்று வரை முடிவுக்கு வரவில்லை.

இதற்கிடையே தான் சமீபத்தில் இருநாடுகள் இடையேயான மோதல் சற்று குறைந்திருந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக மீண்டும் மோதல் வலுத்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா, இங்கிலாந்து தயாரிப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரைன், ரஷ்யா மீது தாக்குதல் நடத்தியது தான் காரணம். 

அமெரிக்க ஜனாதிபதி

இதனால் கோபமான ரஷ்யா, உக்ரைன் மீதும் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. இதனால் மோதல் மீண்டும் தீவிரமானது.

உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள தயார் : ரஷ்ய ஜனாதிபதி புடின் | Russia Ukraine War Update

இதற்கிடையே தான் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்ற டொனால்ட் டிரம்ப் (Donald Trump) போரை நிறுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போதே, தான் அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்திருந்தால் போர் வந்து இருக்காது. 

உக்ரைன் விவகாரம்

இருப்பினும் பதவியேற்ற அடுத்த 24 மணிநேரத்தில் போரை என்னால் நிறுத்த முடியும் என்று அவர் கூறியிருந்தார். மேலும் தேர்தலில் வென்ற பிறகு உக்ரைன், ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகவும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள தயார் : ரஷ்ய ஜனாதிபதி புடின் | Russia Ukraine War Update

இந்நிலையில் உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள தயார் என்று ரஷய ஜனாதிபதி புதின் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்புடன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும், உக்ரைன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் கூறியதாக ஊடங்கங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.