Courtesy: Sivaa Mayuri
சாதாரண பொதுமக்கள் கஷ்டப்படும் போது அரசாங்கத்தின் “நல்ல செய்தி” தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரேமதாச, ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு இல்லாமல் இருப்பது எப்படி “நல்ல செய்தி” யாக இருக்கும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரையின் பின்னரே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு
இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் கவலை தெரிவித்தார்.
இந்த நிலையில், இலங்கை தனது கடனை மறுசீரமைப்பதற்காக இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அரசாங்கம் “நல்ல செய்தி” என்று விளம்பரப்படுத்தி வருவதாக சஜித் குற்றம் சுமத்தியுள்ளார்.