நாகர்ஜுனா
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நாகர்ஜுனா என்றால் உடனே நியாபகம் வருவது சோனியா சோனியா என்ற பாடல் தான்.
தமிழில் சில படங்கள் நடித்தாலும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகனாக தனது 66 வயதிலும் இளம் நடிகர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் முக்கிய நாயகனாக உள்ளார். தனுஷுடன் இணைந்து குபேரா, ரஜினியுடன் கூலி போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

தனது சொந்த ஊரில் புதிய வீடு கட்டியுள்ள எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர் விபுணன்.. இதோ போட்டோஸ்
தென்னிந்திய சினிமாவில் உள்ள பணக்கார நடிகர்களில் இவர் முதல் இடத்தில் உள்ளார் என்று தான் கூற வேண்டும்.

நோய்
மிகவும் ஃபிட்டாக, ஆரோக்கியமாக தோற்றமளிக்கும் நாகர்ஜுனாவிற்கு 15 வருடங்களாக ஒரு உடல்நலப் பிரச்சனை வாட்டியதாம்.
இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், 15 ஆண்டுகளுக்கு முன் மூட்டு வலி தொடங்கியது, அறுவை சிகிச்சை தேவை என்றனர். நான் அதைத் தவிர்த்து லூப்ரிகன்ட் மற்றும் PRP சிகிச்சை எடுத்தேன்.
தினமும் உடற்பயிற்சி செய்கிறேன், இப்போது நலமாக உள்ளேன் என கூறியுள்ளார்.


