எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa), 2019ஆம் ஆண்டு அதிபராக தெரிவு செய்யப்பட்டிருந்தால், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa)வுக்கு ஏற்பட்ட கதியை எதிர்கொண்டிருப்பார் என அதிபர் ரணிலின் ஆலோசகர் ஆசு மாரசிங்க(Ashu Marasinghe) தெரிவித்துள்ளார்.
சஜித், தெரிவு செய்யப்பட்டிருந்தால், கோட்டாபய ராஜபக்சவை விட விரைவில் அதிபர் பதவியை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என மாரசிங்க ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சஜித்தின் குற்றச்சாட்டை
கடந்த அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியினர் பலர் தனக்கு ஆதரவளிக்கவில்லை என்ற சஜித்தின் குற்றச்சாட்டை மாரசிங்க மறுத்தார்.
2919 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது நாங்கள் 24 மணிநேரமும் உழைத்தோம். சஜித் மக்களை நேருக்கு நேர் சந்திக்கும் பயணத்தின் போது அவர் முன்னிலைப்படுத்த வேண்டிய விடயங்கள் குறித்து நாங்கள்தான் ஆலோசனை வழங்கினோம் என அவர் மேலும் தெரிவித்தார்.