ஜெர்மன் (Germany) – ஹாம்பர்க் விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) சுமார் 300 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று காலையில் 10 விமானங்கள் சேவையை மேற்கொண்ட பின்னர், விமான நிலைய ஊழியர்கள் வெளிநடப்பு செய்ததால் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக ஹாம்பர்க் விமான நிலையம் (Hamburg Airport) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விமான நிலைய தரைப் பணி ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வெர்டி, வேலைநிறுத்தப் போராட்டம் திங்கட்கிழமை (10) தொடரும் என்று கூறியுள்ளது.
விமான சேவைகள் இரத்து
இந்த நடவடிக்கையால் 144 வருகைகள் மற்றும் 139 புறப்பாடுகள் இரத்து செய்யப்பட்டன. இதனால் 40,000 க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டனர் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை உள்ளூர் விடுமுறை நாட்களில் பயணம் செய்கின்ற பயணிகளுக்கான போக்குவரத்து கடுமையாக சீர்குலைக்கும் என்று விமான நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், தொழிற்சங்கம் 8% ஊதிய உயர்வு அல்லது மாதத்திற்கு குறைந்தபட்சம் 350 யூரோக்கள் ($380) அதிகரிப்பு, அத்துடன் அதிக போனஸ் மற்றும் கூடுதல் விடுமுறை ஆகியவற்றைக் கோருகிறமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/Wg2zmlPy2bA