முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிகரிக்கும் பாடசாலை மாணவர்களின் இடைவிலகல்! இளங்குமரன் எம்.பி தெரிவிப்பு

தற்போது பாடசாலையை விட்டு விலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது. இதற்கு காரணம் நாட்டின் பொருளாதார பின்னடைவும் கிராமிய வறுமையுமே என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(12) நிகழ்வொன்றின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த அரசாங்கத்தை விட எமது அரசாங்கத்தில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் கல்விக்கு மேலும் அதிக நிதியை ஒதுக்கி கல்வித் துறையை மேம்படுத்துவோம்.

அதிகரிக்கும் பாடசாலை மாணவர்களின் இடைவிலகல்! இளங்குமரன் எம்.பி தெரிவிப்பு | School Dropouts Rise Due To Poverty Ilankumaran

நாட்டை விட்டு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது.

நாங்கள் எமது நாட்டினுள்ளேயே தொழிற் துறைகளை உருவாக்கும் போது மாணவர்களும் இங்கே கல்வி கற்க கூடிய சூழ்நிலை ஏற்படும்.

தங்கத் தீவாக இருந்த தீவகம், கடந்த ஆட்சியாளர்களின் திறனற்ற ஆட்சி காரணமாக தகரத் தீவாக மாற்றம் பெற்றுள்ளது.

சுற்றுலாத்துறையை தீவகத்தில் அபிவிருத்தி செய்வதனூடாக வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் இடமாக மாற்றுவதனூடாக தீவகம் மீண்டும் செந்தளிப்பு பெறும்.

பொருளாதார நிலையம்

தீவகத்தை மீண்டும் தங்கத் தீவாக மிளிர வைப்போம்.

எதிர்காலத்தில் வடக்கில் மூன்று மத்திய பொருளாதார நிலையங்களை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

அதிகரிக்கும் பாடசாலை மாணவர்களின் இடைவிலகல்! இளங்குமரன் எம்.பி தெரிவிப்பு | School Dropouts Rise Due To Poverty Ilankumaran

ஒரு பொருளாதார மத்திய நிலையத்தை மாங்குளத்திலும், பரந்தன் – ஆனையிறவை மையப்படுத்திய இடத்தில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்தையும், பலாலியில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்தையும் உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

இங்கேயே தொழில்துறையை உருவாக்கி, இங்கேயே உழைத்து உண்ணக்கூடிய ஒரு நிலையை உருவாக்குவோம்.

கடந்த காலத்தில் மனித வளம் சிறந்த முகாமைத்துவம் இல்லாமையால் வீணடிக்கப்பட்டது.

ஆனால் இனி நாங்கள் மனித வளத்தை சிறந்த முறையில் திட்டமிட்டு நிர்வகித்து நாட்டை கட்டியெழுப்புவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.