முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாடசாலை உபகரணங்களின் விலைகள் : குற்றஞ்சாட்டும் ஆசிரியர் சங்கம்

புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கவுள்ள நிலையில், பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுபொருட்களை வாங்குவதில் பெற்றோர்கள் மும்முரமாக உள்ளதை காணக்கூடியவாறு உள்ளது.

இந்நிலையில் பாடசாலை உபகரணங்களின் விலை இன்னும் அதிகமாக உள்ளதாக பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சில பாடசாலை உபகரணங்களின் விலைகள் ஏறக்குறைய இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் சங்கங்கள்

மேலும், பாடசாலை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக தற்போதைய அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரம் கொடுப்பனவு வழங்குவது நியாயமற்றதென ஆசிரியர் சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

பாடசாலை உபகரணங்களின் விலைகள் : குற்றஞ்சாட்டும் ஆசிரியர் சங்கம் | School Items Price Increase

அஸ்வெசும பயனாளிகளின் பிள்ளைகளுக்கும், அஸ்வெசும கொடுப்பனவு தேவையுடையோரின் பிள்ளைகளுக்கும் 6,000 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதை விட, அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் அரசாங்கம் சலுகைகளை வழங்க வேண்டும் என அந்த சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

அதன்படி, அனைத்து மாணவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) தெரிவித்துள்ளார்.

மாணவர் சலுகைகள்

மாணவர் தொகைக்கேற்ப வரி குறைக்கப்பட்டு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டதொரு குழுவிற்கு மாத்திரம் 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுவது பாரிய பிரச்சினையாகும் என்றும் கூறியுள்ளார்.

பாடசாலை உபகரணங்களின் விலைகள் : குற்றஞ்சாட்டும் ஆசிரியர் சங்கம் | School Items Price Increase

இந்த சலுகைகள் அனைத்து மாணவர்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையில் அறிவிக்கப்பட்டதற்கு அமைய, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தைக் கல்விக்காக ஒதுக்க வேண்டும் என புரட்சிகர மாணவர் ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினர் மங்கள மத்துமகே தெரிவித்துள்ளார்.

தற்போது க.பொ.த உயர்தர பரீட்சைகள் இடம்பெற்று வருவதுடன்,  மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கை 2025 ஜனவரி 02 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.