புதிய அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தொகுதி அமைப்பாளருமான வருண ராஜபக்ச இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றில் அவர் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ரணிலுக்கு மிகவும் நெருக்கமான சகா
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மிகவும் நெருக்கமான சகா ஒருவரின் இல்லத்தில் இந்த இரகசிய சந்திப்பு நடத்தப்பட்டதாகவும் இந்த இல்லம் கொழும்பில் அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர் என தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கமொன்றை அமைப்பது குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னணியில் பேச்சுவார்த்தை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜே.வி.பி உறுப்பினர்களுக்கும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் இந்த சந்திப்பு தொடர்பில் ரணில் தரப்பிலோ அல்லது அரசாங்கத் தரப்பிலோ இதுவரையில் எவ்வித உறுதிப்படுத்தல்களும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.