முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செப்டம்பர் 21 ஈடேறவுள்ள அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்பு: நம்பிக்கை வெளியிட்ட தமிழ் எம்பி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மேலும் ஐந்தாண்டுகளுக்கு நாட்டை ஆள வேண்டும் என்ற அனைத்து மக்களினதும் எதிர்ப்பார்ப்பு செப்டம்பர் 21 ஆம் திகதி அந்த ஈடேறும் என்று இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் (M. Rameshwaran) தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து, நுவரெலியாவில் (Nuwara – Eliya) இன்று (15) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ நாடு நெருக்கடியில் இருந்தபோது எதிரணியில் இருந்தவர்களெல்லாம் ஆட்சியை பொறுப்பேற்காது பயந்தோடினர்.

அரசியல் ஸ்தீரத்தன்மை

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களுக்காக முன்வந்து சவாலை ஏற்றார். குறுகிய காலப்பகுதிக்குள் அவர் நாட்டை மீட்டெடுத்துள்ளார்.

செப்டம்பர் 21 ஈடேறவுள்ள அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்பு: நம்பிக்கை வெளியிட்ட தமிழ் எம்பி | September Ranil Wickramasinghe S Victory

மலையகம் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அவர் சேவையை வழங்கியுள்ளார். இன்று வரிசைகள் இல்லை. அரசியல் ஸ்தீரத்தன்மை ஏற்பட்டுள்ளது.

அதனால்தான் எதிர்க்கட்சிகளால் கூட சுதந்திரமாக அரசியல் செய்ய முடிகின்றது.

மக்களும் எதிர்பார்ப்பு

மின்வெட்டு இல்லை, எரிபொருளுக்கும் தட்டுப்பாடு இல்லை.

எனவே தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்து ஆள வேண்டும் என வடக்கு, கிழக்கு மலையகம் மற்றும் தெற்கு என நாட்டில் வாழும் அனைத்து மக்களும்
எதிர்பார்க்கின்றனர்.

செப்டம்பர் 21 ஈடேறவுள்ள அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்பு: நம்பிக்கை வெளியிட்ட தமிழ் எம்பி | September Ranil Wickramasinghe S Victory

அந்த எதிர்ப்பார்ப்பு செப்டம்பர் 21 ஆம் திகதி நிறைவேறும். 22 ஆம் திகதி ஆகும்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக இருப்பார். மீண்டும் ரணில், வேண்டும் ரணில் என நாம் பிரசாரம் செய்துவருகின்றோம்.” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்