நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பல முன்னாள் அமைச்சர்கள் படுதோல்வியடைந்துள்ளனர்.
இதன்படி முன்னாள் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, ஹம்பாந்தோட்டையிலும் , முன்னாள் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொழில் உறவுகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார காலி மாவட்டத்திலும் முன்னாள் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் படுதோல்வியடைந்துள்ளனர்.
அதேபோன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச,ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த நிபுண ரணவக்க,ஆகியோரும் தோல்வியடைந்துள்ளனர்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன பொலநறுவை மாவட்டத்தில் படுதோல்வியடைந்துள்ளார்.
படுதோல்வியடைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஏனையவர்களின் விபரம் வருமாறு,
முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர – ஹம்பாந்தோட்டை
முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன – காலி
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார – காலி
முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர – மாத்தறை
முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க – களுத்துறை மாவட்டம்
முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன – அனுராதபுரம்
முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க – அநுராதபுரம்
முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி – இரத்தினபுரி
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய – கேகாலை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரமிதபண்டார தென்னகோன் – மாத்தளை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க – மாத்தளை
சஷீந்திர ராஜபக்ச – மொனராகலை
நிபுன ரணவக்க – மாத்தறை
தஹாம் சிறிசேன – பொலன்னறுவை மாவட்டம்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டி.எம்.டில்ஷான் – களுத்துறை