ஷாலினி அஜித்
முன்னணி நடிகர் அஜித்தின் மனைவியும் பிரபல நடிகையுமான ஷாலினி தனது சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார்.
மலையாள திரையுலகம் மூலம் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமானார். தமிழில் இவர் அறிமுகமான படம் காதலுக்கு மரியாதை. இதை தொடர்ந்து அமர்க்களம், அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.


பரம் சுந்தரி: திரை விமர்சனம்
அமர்க்களம் படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கும்போது, இருவரும் காதலிக்க துவங்கி பின் 2000ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின் சினிமாவிலிருந்து மொத்தமாக விலகிவிட்டார்.
மைக்கேல் ஜாக்சன்
நடனம் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வரும் முகம் மைக்கேல் ஜாக்சன். நடனமாடும் ஒவ்வொரு நபரும் இவருடைய ரசிகர், ரசிகையாக இருப்பார்கள். அப்படி உலகமெங்கும் மைக்கேல் ஜாக்சனுக்கு இருக்கும் லட்சக்காண ரசிகர்களில் ஒருவர் ஷாலினி அஜித்.

இந்த நிலையில், நேற்று மறைந்த நடன கலைஞர் மைக்கேல் ஜாக்சனின் 67வது பிறந்தநாள். அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஷாலினி அஜித் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ பாருங்க..
View this post on Instagram

