முன்னாள் ஜனாதிபதிகள் பல்வேறு குற்றங்களைச் செய்ய பாதாள உலக நபர்களைப் பயன்படுத்தியுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி ,மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன கோனாவாலா சுனிலை என்ற பதாள குழு நபரை வைத்து உயர் நீதிமன்ற நீதிபதியின் வீட்டின் மீது கல் எறிந்தாகவும் மறைந்த ஜனாதிபதி ஆர். பிரேமதாச பத்திரிகையாளர் ரிச்சர்ட் டி சொய்சாவைக் கடத்தி கொலை செய்ய பாதாள உலக நபர்களைப் பயன்படுத்தியதகாவும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
நாமலின் மெய்க்காப்பாளர்
அத்தோடு, ரிச்சர்ட் டி சொய்சா தொடர்பான ராணி என்ற திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளதகாவும் இதனை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ரகசியமாகப் பார்த்து, ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரது தந்தை என்ன செய்தார் என்பதைக் கண்டறியச் சொல்ல விருப்புவதாகவும் அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாதாள உலக நபர்களான ஜூலம்பிடியே அமரே மற்றும் வம்போட்டாவுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தொடர்பு வைத்திருந்ததாகவும், ஜூலம்பிடியே அமரே ஒரு காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மெய்க்காப்பாளராக இருந்தாகவும் சுனில் வட்டகல மேலும் கூறியுள்ளார்.