ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் மெய்ப்பாதுகாவலர் மஹ்மூத் ஹம்தான் கொல்லப்பட்டதாக ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளன.
சின்வார் கொல்லப்பட்ட இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில், IDF (இஸ்ரேலிய பாதுகாப்பு படை) துருப்புக்களுடன் நடந்த மோதலின் போது அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
சின்வாரைக் காக்கும் பொறுப்பு ஹம்தானுடையது என்றும், ஹமாஸின் தல் அல்-சுல்தான் படைப்பிரிவின் தளபதியாக இருந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
உளவுத்துறை தகவல்
இதேவேளை, ஹம்தான் சில வாரங்களுக்கு முன்பு” கொல்லப்பட்டிருக்கலாம் என்று உளவுத்துறை மதிப்பிட்டதாகக் கூறியது, எனினும் அந்த தகவல் உறுதியாக அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை ஹம்தான் தொடர்ந்து பாதுகாத்து வந்தாக தெரிவிக்கப்படுகிறது.
புதன்கிழமை தெற்கு காசாவில் நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது சின்வார் கொல்லப்பட்டதாக இராணுவம் கூறிய ஒரு நாள் கழித்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதுடன், ஹம்தான் இறந்த நேரம் குறித்து மேலும் கருத்து தெரிவிக்க IDF மறுத்துள்ளது.