முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதிய சாதனை படைத்த டைட்டானிக் பயணியின் தங்க கடிகாரம்! எவ்வளவு தெரியுமா…

டைட்டானிக் கப்பல் விபத்தில் உயிரிழந்த பெரும் பணக்காரப் பயணியொருவரின் சடலத்திலிருந்து மீட்கப்பட்ட தங்கக் கைக்கடிகாரம் ஏலத்தில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்தின் வில்ட்ஷயரில் உள்ள ‘ஹென்றி ஒல்ட்ரிட்ஜ் எண்ட் சன்’ (Henry Aldridge and Son) ஏல நிறுவனத்தில் சனிக்கிழமை இது விற்பனையாகியுள்ளது.

இந்த கைக்கடிகாரமானது 1.78 மில்லியன் பவுண்ஸ்களுக்கு விற்பனையாகியுள்ளது.

அவருடனேயே இறப்பது மேல்

குறித்த கடிகாரம் ஐசிடோர் ஸ்ட்ரஸ் (Isidor Straus) என்பவருக்குச் சொந்தமானதாகும்.

இவர் அமெரிக்காவின் பிரபல ‘மேசிஸ்’ அங்காடியின் இணை உரிமையாளரும், அரசியல்வாதியும் ஆவார்.

புதிய சாதனை படைத்த டைட்டானிக் பயணியின் தங்க கடிகாரம்! எவ்வளவு தெரியுமா... | Titanic Passengers Gold Watch Record Price Auction

1912 ஏப்ரல் 14 அன்று டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி மூழ்கியதில் உயிரிழந்த 1,500 பேரில் இவரும் இவரது மனைவி ஐடாவும் அடங்குகின்றனர்.  

கப்பல் மூழ்கிய இரவு, ஐசிடோரின் மனைவி ஐடா கணவரைப் பிரிந்து செல்வதை விட, “அவருடனேயே இறப்பது மேல்” என அவர் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேடுதலின் போது ஐடா ஸ்ட்ரஸின் உடல் கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது. 

விற்பனையாகி சாதனை 

விபத்துக்குப் பின் சில நாட்களில் அட்லாண்டிக் கடலில் மீட்கப்பட்ட ஐசிடோரின் சடலத்திலிருந்து இந்த 18 கரட் தங்கக் கடிகாரம் கண்டெடுக்கப்பட்டது.

புதிய சாதனை படைத்த டைட்டானிக் பயணியின் தங்க கடிகாரம்! எவ்வளவு தெரியுமா... | Titanic Passengers Gold Watch Record Price Auction

அவற்றில் அவரது ஜூல்ஸ் ஜூர்கென்சன் கடிகாரம் டைட்டானிக் மூழ்கியதாக நம்பப்படும் நேரமான அதிகாலை 2:20 மணிக்கு நிறுத்தப்பட்டதாகவும் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.  

இந்நிலையில் ஐசிடோர் ஸ்ட்ரஸ்க்கு (Isidor Straus) செந்தமான கைக்கடிகாரமானது 1.78 மில்லியன் பவுண்ஸ்களுக்கு விற்பனையாகி சாதனை படைத்ததுள்ளது.

ஏலத்தில் கைக்கடிகாரம் தவிர ஐடா கப்பலில் இருந்தபோது எழுதிய கடிதம் ஒன்றும் 100,000 பவுண்ஸ்களுக்கும், டைட்டானிக் பயணிகள் பட்டியல் 104,000 பவுண்ஸ்களுக்கும் விற்பனையாகின.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்