சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று சில கலாட்டாவான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஆரம்பத்தில் விஜயா நடனப்பள்ளியில், மீனா-சிந்தாமணி வாக்குவாதம் நடக்கிறது. பின் வீட்டில் ரவி-ஸ்ருதி பீட்சா வாங்கிக்கொண்டு வர டயட் இருக்கும் விஜயா-மனோஜ் சாப்பிட முடியாமல் தவிக்கிறார்கள்.
மீனா ஒருநாள் மண்டப வேலை இருக்கிறது அன்று சமைக்க முடியாது என கூற விஜயா எனக்கு சமைக்க முடியவில்லை என்றால் வெளியே போங்க என்கிறார். இதனால் அண்ணாமலை கோபமாக அவரை திட்டிவிடுகிறார்.
அடுத்ததாக டயட் இருந்ததால் விஜயா மனோஜ் இருவரும் வயிற்று வலியால் துடிக்கிறார்கள்.
புரொமோ
நாளைய எபிசோட் புரொமோவில், ரோஹினியின் மாமா அவரது கடைக்கு ஹெல்மெட் அணிந்து வருகிறார். தனது உறவினர் திருமணத்திற்காக அனைத்தையும் வாங்க வந்தேன் என கூறுகிறார்.
அந்த நேரத்தில் அண்ணாமலை மற்றும் முத்து கடைக்குள் இருக்க அவரை பார்த்துவிடுகிறார்கள். இதோ புரொமோ,
View this post on Instagram