ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 15 முதல் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தம்மை விடவும் அரசாங்கத்துடன் கூடுதலாக தொடர்புகளை பேணுவது இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே என அவர் சுட்டிக்காட்டடியுள்ளார்.
அமைச்சு பதவி
சிங்கள தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், தாம் அரசாங்கத்தில் அமைச்சு பதவி ஒன்றை பெற்றுக்கொள்ளும் உத்தேசத்தில் இல்லை என ராஜித தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு ஆதரவினை வழங்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் நடவடிக்கைகளை சீர்குலைக்கும் எந்தவிதமான திட்டங்களும் தம்மிடத்தில் கிடையாது என தெரிவித்துள்ளார்.