பசறை (Passara) தமிழ்த் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவுக்குட்பட்ட சில தரங்களுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வகுப்பறைகள் அமைந்துள்ள மூன்று மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் குளவி கூடு ஒன்று உள்ளமையினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பசறை தமிழ்த் தேசிய பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ நிலையம்
அந்தவகையில் பசறை தமிழ்த் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவுக்குட்பட்ட 3, 4 மற்றும் 5ம் தரங்களுக்குஇ இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், வலய கல்வி காரியாலயம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் உள்ளிட்ட தரப்பினருக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குளவிக் கூட்டை இன்றைய தினத்திற்குள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமானால் நாளைய தினத்தில் வழமை போல் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என பசறை தமிழ்த் தேசிய பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
மதிய உணவு
இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என கல்வி அமைச்சின் (Ministry of Education) செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானது எனவும் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் திலகா ஜயசுந்தர (Tilaka Jayasundara) தெரிவித்துள்ளார்.