உலகெங்கிலும் உள்ள தனிப் பயணிகளால் அடுத்த ஆண்டுக்கு முன்பதிவு செய்யப்பட்ட மிகவும் பிரபலமான பத்து பயணத் தளங்களில் இலங்கை முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
குறித்த விடயமானது, Flashpack Travel என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள தரவின் படி தெரியவந்துள்ளது.
காரணம்
இதற்கு முன்னதாக, அடுத்த ஆண்டுக்கான தரப்படுத்தலில் இலங்கை நான்காவது இடத்தைப் பெற்றிருந்ததுடன், சமீபத்திய தரப்படுத்தலில் நான்கு இடங்கள் முன்னேறி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இலங்கை இந்தியாவைப் போல் பெரியதாக இல்லாவிட்டாலும், இந்தியாவில் கிடைக்கும் அனைத்து அனுபவங்களையும் சலுகை விலையில் இலங்கை பெறுவது இந்த ஆண்டு தரவரிசையில் நான்கு இடங்கள் முன்னேற முக்கியக் காரணம் என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அனுபவங்கள்
இலங்கைக்கு வருபவர்கள் சீரான அனுபவம், கடற்கரைகள், சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகள், சுவையான உணவுகள் மற்றும் தனிப் பயணி ஒருவர் இலங்கையில் இருந்து எதிர்பார்க்கும் அனைத்தையும் பெற முடியும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டிற்கான தரவரிசையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை ஜப்பான் மற்றும் பின்லாந்து பிடித்துள்ளதுடன், கடைசி இடத்தை மத்திய அமெரிக்காவின் க்வுதமாலா (Guatemala) என்ற நாடு பிடித்துள்ளது.