குவைத் சர்வதேச விமான நிலையத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் உள்கட்டமைப்புகள் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இலங்கை நாட்டினர் காயமடைந்துள்ளமை குறித்து இலங்கை அரசு தனது பலத்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பான அறிக்கையை வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வெளியிட்டுள்ளது.
குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை குடிமக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் நலம் ஆகியவற்றுக்கே இலங்கை அரசாங்கம் எப்போதும் முதலிடமும், உச்சகட்ட முன்னுரிமையும் அளிக்கும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிராந்தியத்தின் அமைதி
அத்தோடு, பிராந்தியத்தின் அமைதி, பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணுவதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு இலங்கை எப்போதும் ஆதரவளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மோதல்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் தங்களின் உச்சகட்ட நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு இலங்கை அரசாங்கம் இந்த அறிக்கை வாயிலாகக் கேட்டுக்கொண்டுள்ளது.
Source: https://ibctamil.com/article/sri-lanka-concern-over-injured-sri-lanka-kuwait-1780592535

