முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கு ஐ.நா.வில் பல தடை விதிக்கப்பட கூடும் – எச்சரிக்கும் பிரதீபா மஹாநாம

பாதுகாப்புப் பேரவையில் வீட்டோ பவரை எந்த நாடும் பயன்படுத்தாவிட்டால் இலங்கைக்கு பல தடைகள் விதிக்கப்படக் கூடும் என பேராசிரியர் பிரதீபா மஹாநாம எச்சரித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் பரிந்துரைக்கப்பட்டவைகளை நாம் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவ்வாறில்லையெனில் எமக்கு பெரும் ஆபத்து காத்திருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் அண்மையில் 13 பக்கங்களை கொண்ட எழுத்துமூல அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

13 பக்கங்களை கொண்ட அறிக்கை

இதில் இலங்கை கடைபிடிக்க வேண்டியவை தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதற்கு ஒன்றிணைந்த பங்களிப்பை வழங்குமாறு குறிப்பிடப்பட்டிருந்ததை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அது சாதகமான நிலையாகும். நாடாக நாம் அவற்றுக்கு கட்டுப்படவில்லை.

இலங்கைக்கு ஐ.நா.வில் பல தடை விதிக்கப்பட கூடும் - எச்சரிக்கும் பிரதீபா மஹாநாம | Sri Lanka May Face Multiple Sections At The Un

ஆனால் எமக்கு எதிரான பரிந்துரைகளை முன்வைக்க அமெரிக்காவே சமபங்களிப்பை வழங்கியது.

ஆனால் இம்முறை அமெரிக்க பிரதிநிதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளனர். அதனால் இம்முறை பிரிட்டன் எமக்கு எதிரான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

பிரிட்டன் தனிமைப்படுத்தப்பட்டதால் சம பங்களிப்பை வழங்குமாறு எம்மிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதற்கு எமது பக்கத்தில் காத்திரமான நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா, மலாவி, மொன்றிகோ ஆகிய நாடுகளுடன் ஐந்து நாடுகள் இணைந்தே இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை கொண்டுவரவுள்ளன.

இலங்கைக்கு வெளியே சாட்சிகள்

அதன் ஒரு அறிக்கையே வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திலுள்ள சில பரிந்துரைகள் நாட்டின் இறைமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் பாதகமானதால் நிராகரிக்கப்பபட்டுள்ளது.

இலங்கைக்கு ஐ.நா.வில் பல தடை விதிக்கப்பட கூடும் - எச்சரிக்கும் பிரதீபா மஹாநாம | Sri Lanka May Face Multiple Sections At The Un

அத்தோடு போர் குற்றம் தொடர்பில் இலங்கைக்கு வெளியே சாட்சிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை செய்ய வேண்டும் என்கின்றனர்.

ஆனால் மனித உரிமைகள் தொடர்பிலான பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்க முற்பட்டுள்ளது. ஆனாலும் பிரதானமான பிரச்சினைகள் நான்குக்கு தீர்வு காண வேண்டிள்ளது.

ரோம் சாசனத்தில் கையொப்பமிடுதல் அது மிகவும் ஆபத்தானதாகும். மற்றையது பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டம் கொண்டு வருதற்கு இணக்கம் தெரிவித்துள்ளோம். இவ்வாறான செயற்பாடுகள் எமக்கு நன்மை பயக்க கூடியதாக அமைந்துள்ளது.

சில நாடுகள் சார்பாக வாக்களிக்க கூடும்

மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இந்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் அரசின் போக்கு பராட்டப்பட வேண்டியது.

இவ்வாறு உயர்ஸ்தானிகர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டு கொண்டு வருவதால் சாதமான நிலையும் தென்படாமல் இல்லை. மேலும் இன, மத, வர்க்க பேதங்களின் அடிப்படையிலான பிளவுகளோ அல்லது ஒடுக்குமுறை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ஐ.நா.வில் பல தடை விதிக்கப்பட கூடும் - எச்சரிக்கும் பிரதீபா மஹாநாம | Sri Lanka May Face Multiple Sections At The Un

இவை சாதகமான நிலைப்பாடுகளாக நோக்கலாம்.எமக்கு எதிராக தீர்மானத்தை வெற்றிக் கொள்ள 24 நாடுகள் எமக்கு சார்பாக வாக்களிக்க வேண்டும். 47 உறுப்பு நாடுகள் காணப்படுகின்றன.

இவற்றில் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளை எமது பக்கம் வாக்களிக்க வைக்க வேண்டும். இந்தியாவை நாம் வெற்றி கொண்டால் கெரிபியன் நாடுகள் எமக்கு சார்பாக வாக்களிக்க கூடும்.

மேலும் தென்னாபிரிக்காவும் எமக்கு முக்கியமான நாடாகும் இந்த நாடுகளை எமது பக்கம் இழுத்துக் கொண்டால் பல வருடங்களாக இழுபட்டு திரியும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளுக்கு இலங்கைக்கான ஒரு தீர்மானத்தை முன்வைக்க கூடிய வாய்ப்புகள் காணப்படுகிறது என்று கூறியுள்ளார்.           

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.