தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான கட்சிகளின் வேட்பாளர்களில் எவர் வென்றாலும் இரண்டு மூன்று மாதங்களில் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர்களிற்கு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் சம்பள உயர்வு குறித்த வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். இது இலஞ்சம் போன்றது. இதன் காரணமாக அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அரசாங்க ஊழியர்களிற்கு சம்பள உயர்வு குறித்து வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர்.
உணவு வழங்குவது தகுதிநீக்கம் செய்யப்படக்கூடிய குற்றம் என்றால், அரசாங்க ஊழியர்களிற்கு சம்பள உயர்வை வழங்குவதாக தெரிவிப்பது இலஞ்சம் வழங்குவதை போன்றது.
இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என முறைப்பாடு அளிக்கப்பட்டால், பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தகுதிநீக்கப்படலாம்.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களின் செலவுகள் குறித்த ஆதாரங்களை சேகரித்து வருகின்றோம், தேர்தல் ஆணைக்குழுவுடன் இது குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம்.
வேட்பாளர்களின் சொத்துக்கள் குறித்த பிரகடனம் குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ளும், இதன் காரணமாக அவர்கள் கைதுசெய்யப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.