விசா காலாவதியானதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை பணியாளர்களுடன் இணைக்குமாறு வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இஸ்ரேல் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவருடனான சந்திப்பின் போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
குறித்த நபர்களுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் அமைச்சர் ஹேரத் தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் அரசாங்கம் நடவடிக்கை
இதன்படி, இந்த கோரிக்கையை தாமதமின்றி இஸ்ரேல் அரசாங்கத்திற்கு அனுப்ப தூதுவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

அத்துடன், இஸ்ரேலில் பல்வேறு துறைகளில் கணிசமான எண்ணிக்கையிலான இலங்கையர்கள் தற்போது பணியாற்றி வருவதாகவும், இலங்கையர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்புகளை வழங்க இஸ்ரேல் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

