முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கடவுச்சீட்டு எடுக்க காத்திருப்போருக்கு பேரிடி! இன்று முதல் நடைமுறையாகும் திட்டம்

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது முன்கூட்டி நேரம் ஒதுக்கும் முறைமை இன்று (28) முதல் இடைநிறுத்தப்படவுள்ளது.

இதற்கமைய ‘முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை’ என்ற முறை பின்பற்றப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tran Alas) தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடவுச் சீட்டுப் புத்தகங்கள் குறைவாக இருப்பதால், மிக அவசரமாகத் தேவைப்படுவோர் மட்டுமே கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களம்

இந்நிலையில், நேற்றிரவு (27 ) வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற வந்தவர்கள் பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் (Department of Immigration and Emigration) பிரதான அலுவலகத்தில் காத்திருப்பதையும் காணமுடிந்தது.

கடவுச்சீட்டு எடுக்க காத்திருப்போருக்கு பேரிடி! இன்று முதல் நடைமுறையாகும் திட்டம் | Sri Lankan Passport New System Price Details

இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

“மக்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க.. எல்லாலே காசுதான்.. கடையில சாப்பிட்டு குடிக்க வேண்டிம்.. பணமும் முடிந்து விட்டது என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இறுதியாக, பாஸ்போர்ட் பெற மூன்று நாட்கள் வரை ஆகின்றது.
டோக்கன் கொடுப்பதாக கூறுகின்றனர் எப்படி என்று தெரியவில்லை. எத்தனை நாட்கள்…? பணமும் முடிந்து விட்டது., இறுதியில் ஒருநாள் சேவை என கூறி 20 ஆயிரம் கேட்கிறார்கள் என பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம்

இதேவேளை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான வெற்று வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் இருப்பதால் கடவுச்சீட்டுகளை வழங்குவதை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அண்மையில் அறிவித்தது.

கடவுச்சீட்டு எடுக்க காத்திருப்போருக்கு பேரிடி! இன்று முதல் நடைமுறையாகும் திட்டம் | Sri Lankan Passport New System Price Details

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக அதன் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது முன்கூட்டி நேரம் ஒதுக்கும் முறைமை இன்று (28) முதல் இடைநிறுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.